search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செருப்பு தைக்கும் தொழிலாளி"

    • ராம்சேட்டுக்கு தையல் மெஷின் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்தார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அவர் அனுப்பி வைத்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்தார்.

    இதனையடுத்து இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

    ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். 'எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள்' என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை ராம்சேட் பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

    இதனால், இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
    சண்டிகர்:

    சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

    ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.



    சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார்.
    காங்கேயம்:

    காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறுதொழுவு தேவனபாளையம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி கூடம் முடித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, மாணவிக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன்(வயது 60) என்பவர் இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

    மேலும், இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த ஆசாமி பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிஜந்தர்(25) என்பதும், இவர் பிஸ்கெட் வாங்கி கொடுத்து மாணவியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவியாக இருந்த முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார். 
    ×